Tuesday, June 16, 2009

ஒரு ஆவியின் கதை - 2

ஆச்சரியத்துடன் கதவையே பார்த்தேன், சட்டென்று ஒரு பிரகாசமான ஒரு ஒலி தென்பட்டது, அதிலிருந்து ஒரு வெண்ணிற ஆடை அணிந்த ஒரு மனிதனை கண்டேன்.

எனதருகில் வந்த அந்த உருவம் சற்று நேரம் என்னை பார்த்தது, பயத்தில் ஒன்றும் புரியவில்லை என்ன செய்வது என்று தெரியவில்லை, கண்ணை மட்டும் இறுக்க மூடிகொண்டேன்.

சிறிது நேரம் கழித்து கண் திறந்தால் ஒருவரும் இல்லை, எல்லாம் ஒரு கணவு போல் இருந்தது.

Wednesday, June 3, 2009

ஒரு ஆவியின் கதை

காலங்கள் மாறினாலும், மனிதர்கள் மாறினாலும் அவர்களின் எண்ணங்கள் மாறினாலும் கூட அனைவராலும் விரும்பத்தக்க, திடுக்கிடும் கதைகளில் ஒன்றுதான் இந்த ஆவியின் கதை.

நான் உலகில் ஏன் பிறந்தேன் என்ற கேள்விக்கு பதிலை கண்டுபிடிபதற்குள் நன் ஏன் இறந்தேன் என்று எண்ணிகொண்டிருக்கும் ஒரு ஆத்மாவின் புலம்பல் ஏன் செவியில் விழ கேட்டேன். ஒன்றுமே புரியாமல், சற்று நேரம் பேசாமல் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தேன்.

"டோமினிக்"..... "டோமினிக்"..... என்ற குரல், அமாம் அது ஏன் பெயர் தான் ! திரும்பி பார்த்தால் என் அம்மா. எழுந்துடுரா லூசு இன்னமும் தூங்குறியா! போயி குளிடா மணி ஆயிடிச்சி ஆபீஸ் போகணும்.

ஆமாங்க எல்லாரும் என்ன திட்டுவாங்க, நான் என்னங்க பண்ணுவேன் ஓறு நாள் வருங்க அன்னைக்கு இவங்கள எல்லாரையும் பாத்துகிறேன்.

இந்த நாள் இனிய நாள் என்று நினைத்து, நானும் நம்பி வேலையெல்லாம் முடிச்சி வீட்டுக்கு வந்தேங்க.
பொழுது மறைந்து இரவு வந்தது, என் ரூமுக்கு வந்து, அமர்ந்தேன்.

சிறிது நேரம் கண்மூடி உறங்கினேன், அதே புலம்பல் சிறிது வேறுவிதமாக, ஏதோ ஒன்று என்னிடம் எதையோ கூற வேண்டும் என்றது போல் இருந்தது.

யாரோ உள்ளே வருவது போல் இருந்தது, கண் திறந்து பார்த்தால் ,
.
.
.
கதவு மூடிகொண்டது ......................
.
.
.
எனக்கு ஒரே ஆச்சரியம், கூட பயமும் தாங்க.